ADDED : பிப் 20, 2026 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்: புழல் சிறை 'போக்சோ' கைதி, மூச்சுத்திணறலால் நேற்று கா லமானார்.
புழல் தண்டனை சிறையில் 1,500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
இதில், மேற்கு சைதாப்பேட்டை, சாரதி நகரைச் சேர்ந்த ரங்கநாதன், 76, என்பவர் 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு, 2022 மே 18ம் தேதி புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட் டார்.
இந்நிலையில் ரங்கநாதனுக்கு நேற்று முன்தினம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

