தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பிரிஸ்டின் சி.சி., அணி கிரிக்கெட்டில் அபாரம்

 பிரிஸ்டின் சி.சி., அணி கிரிக்கெட்டில் அபாரம்

 பிரிஸ்டின் சி.சி., அணி கிரிக்கெட்டில் அபாரம்


ADDED : ஏப் 22, 2026 04:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 04:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, அகரம் பகுதியில் உள்ள நெல்சன் வாஹி குரு கிரிக்கெட் மைதானத்தில், ஆடவருக்கான டிவிஷன் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

அதில், 90 ஓவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், பிரிஸ்டின் சி.சி., அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாலீஸ் தேவ் 71 பந்துகளில் 59 ரன், பிரணவ் மனோ 55 பந்துகளில் 43 ரன் எடுத்து, அணியை ஏறுவரிசையில் நடத்தினர்.

அடுத்து வந்த தீபன், எதிர் அணியின் பந்து வீச்சை முறியடித்து 200 பந்துகளில் 150 ரன் குவித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முடிவில் 87 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 361 ரன் குவித்தது.

கடினமான இலக்குடன் களமிறங்கிய மெட்ராஸ் சி.சி., அணியில் சூர்யகாந்த் நிதானமாக விளையாடி 152 பந்துகளில் 94 ரன் எடுத்தார். அவருக்கு துணையாக சரண் 109 பந்தில் 100 ரன்கள் அடித்தார்.

வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால், மெட்ராஸ் சி.சி., அணி 68 ஓவர்களில் 270 ரன்னில் சுருண்டது. இதனால் 91 ரன் வித்தியாசத்தில் பிரிஸ்டின் சி.சி., அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us