/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியாருக்கு நிகராக வாரிய குடியிருப்பு: 10 அடுக்கு கட்டடம் தயார்
/
தனியாருக்கு நிகராக வாரிய குடியிருப்பு: 10 அடுக்கு கட்டடம் தயார்
தனியாருக்கு நிகராக வாரிய குடியிருப்பு: 10 அடுக்கு கட்டடம் தயார்
தனியாருக்கு நிகராக வாரிய குடியிருப்பு: 10 அடுக்கு கட்டடம் தயார்
ADDED : ஜன 06, 2024 12:11 AM

சென்னை,பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் 27,000 வீடுகளில், பயனாளிகள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், 428 கோடி ரூபாயில், 3,276 வீடுகள் கட்டும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதில், 400 வீடுகள் பணி முடிந்து, பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
மீதமுள்ள, 2,876 வீடுகள் கட்டும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இதில், 10 அடுக்கு உடைய 1,600 வீடுகள் கட்டப்படுகின்றன. இதை, ஆர்.ஆர்.துளசி என்ற நிறுவனம் கட்டுகிறது.
இந்த வீடுகள், தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு ஈடாக முன்மாதிரி கட்டடமாக கட்டப்படுகிறது. ஒவ்வொரு வீடும், 400 சதுர அடி பரப்புடையது.
முந்தைய திட்ட பல குடியிருப்புகளில், வரவேற்பு அறையில் சமையல் அறைக்கான சிலாப், கழிப்பறை அமைக்கப்பட்டிருக்கும்.
இதில், வெஸ்டன் கழிப்பறை, குளியல் அறை, சமையல், படுக்கை, வரவேற்பு அறை என தனித்தனியாக கட்டமைத்து, 'டைல்ஸ்' பதிக்கப்பட்டு உள்ளது.
முந்தைய திட்டங்களில், நடைபாதை பகுதி, மாடிப்படியில் சிமென்ட் கட்டமைப்பு இருக்கும். இதில், டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளன. மர வகையை சேர்ந்த கதவு, காற்றோட்டம் அதிமுள்ள யு.பி.வி.சி., வகை ஜன்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதேபோல், முந்தைய திட்டங்களில், இரண்டு வீட்டுக்கு ஒரு 'பிளாஸ்டிக்' குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது. இதில், தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது.
இத்திட்டத்தில் 4,500 லிட்டர் கொள்ளளவில், 10 வீட்டுக்கு ஒரு சிமென்ட் தொட்டி அமைத்து, ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி குழாய் இணைக்கப்பட்டு உள்ளது.
முந்தைய திட்டங்களில், ஒவ்வொரு பிளாக்கிலும் ஒன்று, இரண்டு லிப்ட் இருக்கும். இத்திட்டத்தில், மூன்று லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒன்று, மருத்துவமனையில் இருப்பது போல், ஸ்டெச்சர் செல்லும் வகையில் உள்ளது. ஒவ்வொரு தளத்திலும், தீயணைப்பு கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், மழைநீர் செல்லும் வகையில், ஒவ்வொரு பிளாக்கை சுற்றியும், ஒரு அடி அகலத்தில், வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.
முந்தைய திட்டங்களில், வெளிப்பகுதி சுவரில், சுண்ணாம்பு அடித்து சாதாரண வண்ணம் பூசப்படும். இத்திட்டத்தில், சுவரின் ஈரப்பதம் உள்ளே இழுக்காத வகையில், 5 ஆண்டுகள் வாரண்டியுடன், பல கலரில் வண்ணம் பூசப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும், 13 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது.
பொதுவாக, வாரிய குடியிருப்பு என்றால், தனியாக தெரியும். ஆனால், இந்த குடியிருப்பு, தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு ஈடாக கட்டமைக்கப்பட்டு உள்ளதால், எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
இந்த குடியிருப்பு, பகிங்ஹாம் உள்ளிட்ட நீர்நிலைகளில் வசிப்போருக்கு ஒதுக்க கட்டப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வீட்டுக்கும், பயனாளிகள் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை, நீர்நிலைகளை மேம்படுத்தும், நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை செலுத்தி வருகிறது.