ADDED : ஜூலை 16, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார், ஆலந்துார்- - கிண்டி, ஜி.எஸ்.டி., சாலையில் கத்தோலிக் சிரியன் வங்கி செயல்பட்டு வருகிறது.
வங்கியில் வாடிக்கையாளர்கள் வைத்த நகைகளை, கூடுதல் தொகைக்கு வைத்ததாக போலி கணக்கு காண்பித்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தி, மேலாளார் சாமிநாதன் மற்றும் வங்கி ஊழியர்கள் திவாகர், பிரசாத், சாருமதி ஆகியோரை பணிநீக்கம் செய்ததாக தெரியவருகிறது.
வாடிக்கையாளரின்வங்கி கணக்கில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும், தகவல்கள் வெளியாகின.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், வங்கியை நேற்று முற்றுகையிட்டனர். பரங்கிமலை போலீசார், வங்கி அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வங்கி தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்.