/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் ஊழியர் பலி
/
லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் ஊழியர் பலி
ADDED : மார் 29, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயப்பாக்கம்:அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 42; தனியார் நிறுவன ஊழியர்.
இவர், இருசக்கர வாகனத்தில், அயப்பாக்கம் - அம்பத்துார் சாலையில், நேற்று காலை 6:45 மணிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, முன்னால் சென்ற குடிநீர் லாரியை முந்த முயன்று, வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சக்திவேல் உயிரிழந்தார்.
ஆவடி போக்குவரத்து போலீசார், அவரது உடலை கைப்பற்றினர்; லாரி ஓட்டுனர் சாமிநாதன், 26, என்பவரை கைது செய்தனர்.