/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு
/
போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு
ADDED : பிப் 13, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஆசிரியர் தினத்தையொட்டி, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு இலக்கியம் சார்ந்த பேச்சு, கட்டுரை, பாட்டு மற்றும் தனித்திறன் ஆகிய பிரிவுகளில், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது மொழிகளில் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
அதேபோல், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், பூப்பந்து, கைப்பந்தாட்டம் மற்றும் வளையம் எறிதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டன.
மொத்தம், 24 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில், 283 ஆசிரியர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, நேற்று வழங்கினார்.