/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வினியோகத்தில் சிக்கல் 10 நாளாக மக்கள் பாதிப்பு
/
குடிநீர் வினியோகத்தில் சிக்கல் 10 நாளாக மக்கள் பாதிப்பு
குடிநீர் வினியோகத்தில் சிக்கல் 10 நாளாக மக்கள் பாதிப்பு
குடிநீர் வினியோகத்தில் சிக்கல் 10 நாளாக மக்கள் பாதிப்பு
ADDED : பிப் 20, 2024 12:41 AM
புழுதிவாக்கம், சென்னை மாநகராட்சியோடு, புழுதிவாக்கம் இணைக்கப்பட்டதும், குடிநீர் வாரியம் சார்பில் குழாய் பதிக்கப்பட்டு, 15 ஆண்டுகளாக, வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், இப்பகுதிகளில் புதிதாக வீடுகட்டி குடியேறுவோர் மற்றும் புதிய குடியிருப்புகள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தன.
இதனால், புதிய வீடுகளுக்கும், பழைய குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
பகுதி மக்கள் கூறியதாவது:
வீடுகள் எண்ணிக்கை அளவிற்கு, குடிநீர் செலுத்தும் குழாய்களின் அளவு போதுமானதாக இல்லை. இதனால், குழாய்களில் அடிக்கடி வெடிப்பு ஏற்பட்டு, குடிநீர் வினியோகம் அவ்வப்போது தடைபடுகிறது.
கடந்த ஆறு மாதங்களில், எட்டு முறைக்கும் மேல், குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ள நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவும் குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், கடைகளில் விற்கும் கேன்களையே, சமையல் மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
தினமும் 100 ரூபாய்க்கும் கூடுதலாக செலவு செய்யும் சூழல் எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் எடுத்து, எங்கெல்லாம் புதிய குழாய்கள் பொருத்த வேண்டுமோ, அதை கணக்கிலெடுத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

