தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சோழிங்கநல்லுாரில் 8 ஏக்கர் இடத்தில் அரசு வளாகம் கட்டுவதில் சிக்கல் நீடிப்பு

சோழிங்கநல்லுாரில் 8 ஏக்கர் இடத்தில் அரசு வளாகம் கட்டுவதில் சிக்கல் நீடிப்பு

சோழிங்கநல்லுாரில் 8 ஏக்கர் இடத்தில் அரசு வளாகம் கட்டுவதில் சிக்கல் நீடிப்பு


UPDATED : மே 06, 2026 06:22 PM

ADDED : மே 06, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 06:22 PM ADDED : மே 06, 2026 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழிங்கநல்லுார்:ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம் கட்ட திட்டமிடப்பட்ட 8 ஏக்கர் இடத்திற்கு, ஆவின் பால் நிறுவனமும் சொந்தம் கொண்டாடுவதால், வளாகம் கட்டுவதில் சிக்கல் நீடித்துள்ளது.

சோழிங்கநல்லுார் தொகுதி, தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாகவும், சென்னை மாவட்டத்தில் அதிக பரப்பு கொண்ட தாலுகாவாகவும் உள்ளது.

இங்குள்ள பெரும்பாலான இடங்கள் நீர்நிலைகளாக உள்ளதால், அரசு துறை அலுவலகங்களுக்கு சொந்த இடம் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. அதனால், பல துறைகளுக்கான அலுவலகங்கள், வெவ்வேறு இடங்களில் வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.

அனைத்து துறைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டும் என, பல ஆண்டுகளாக தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு, வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள சோழிங்கநல்லுார் தாலுகா, சர்வே எண் 439/2ல் உள்ள 8 ஏக்கர் இடத்தில் ஒருங்கிணைந்த அரசு வளாகம் அமைக்க வருவாய்த்துறை திட்டமிட்டது.

இந்த இடத்தில், 2 ஏக்கர் சோழிங்கநல்லுார் தாலுகா அலுவலகத்திற்கும், மீதமுள்ள இடத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம், உணவு பொருள் வழங்கல் துறை உதவி கமிஷனர், கருவூலம், நீதிமன்றம், கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அரசு துறைகளுக்கான அலுவலகங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், ஆவின் பால் நிறுவனம், 8 ஏக்கர் இடத்திற்கு உரிமை கொண்டாடி, அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதனால், ஒருங்கிணைந்த அரசு வளாகம் அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஆவின் பால் நிறுவனத்திற்கு, 35 ஏக்கர் இடம் உள்ளது. இருந்தும், நாங்கள் நீதிமன்றத்தில் வாதாடி உத்தரவு பெற்று, ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை மீட்டு, சுற்றிலும் வேலி அமைத்த இடத்தை, ஆவின் நிறுவனம் கேட்பதில் எவ்வித நியாயமும் இல்லை.

வேறு அரசு இடம் இல்லை. இந்த இடத்தில் ஒருங்கிணைந்த அரசுத்துறை அலுவலக வளாகம் கட்ட, உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us