/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 220 ' ஏசி ' மின் சிற்றுந்து இயக்க திட்டம்
/
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 220 ' ஏசி ' மின் சிற்றுந்து இயக்க திட்டம்
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 220 ' ஏசி ' மின் சிற்றுந்து இயக்க திட்டம்
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 220 ' ஏசி ' மின் சிற்றுந்து இயக்க திட்டம்
ADDED : அக் 30, 2025 12:27 AM

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 220 எண்ணிக்கையில், 'ஏசி' மின்சார சிற்றுந்துகள் இயக்க, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 20 சிற்றுந்துகள்; ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில், 146 சிற்றுந்துகளை, மாநகர போக்குவரத்து கழகமான எம்.டி.சி., இயக்கி வருகிறது.
இருப்பினும், பயணியர் தேவை அதிகமாக உள்ளதால், கூடுதல் சிற்றுந்துகளை இயக்க வேண்டும் என, மெட்ரோ ரயில் நிறுவனம், எம்.டி.சி.,க்கு கோரிக்கை விடுத்துள்ளது. சிற்றுந்துகள் இயக்க வேண்டிய இடங்கள் குறித்த பட்டியலையும் அளித்துள்ளது.
இதற்கிடையே, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 220 மின்சார 'ஏசி' சிற்றுந்துகள், தனியார் பங்களிப்புடன் இயக்க, எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டம், வரும் 3ம் தேதி நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது.
இதில், எம்.டி.சி., - மெட்ரோ ரயில் நிறுவனம், கும்டா மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
பஸ், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், சென்னையில் முதன் முறையாக, 220 'ஏசி' மின்சார சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதற்காக, வரும் 3ம் தேதி நடத்தப்படும் டெண்டருக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தில், இதுகுறித்து விரிவாக பேசப்பட உள்ளது. அதன்பின், டெண்டர் வெளியிட்டு ஓராண்டுக்குள், 220 சிற்றுந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

