/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடுகிடுவென உயர்ந்தது திட்ட மதிப்பீடு
/
கிடுகிடுவென உயர்ந்தது திட்ட மதிப்பீடு
ADDED : ஏப் 24, 2025 12:32 AM
முதற்கட்ட மெட்ரோ திட்டத்தின் விரிவாக்காக, சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும் என, 2018 ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. அப்போது, திட்ட மதிப்பீடு, 4,080 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ ரயில் நிர்வாகம் இடையே வழித்தடம், கட்டமைப்பை முடிவு செய்தில் முரண்பாடு ஏற்பட்டதால், பல ஆண்டுகளாக திட்டம் முடங்கியது.
இதற்கிடையே, கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைந்ததால், திட்டத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இரு தரப்பு அதிகாரிகளையும் அழைத்து அரசு பல கட்ட பேச்சு நடத்தி, வழித்தடத்தில் சில மாற்றங்கள் செய்து, திட்ட வரைவு அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டது. தற்போது திட்ட மதிப்பீடு, 9,335 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, நிலத்தின் விலை உயர்வு இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

