/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ 1.15 கோடி செலவிலான திட்டப் பணிகள் துவக்கம்
/
ரூ 1.15 கோடி செலவிலான திட்டப் பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 15, 2025 12:39 AM
திருவொற்றியூர், திருவொற்றியூரில், 1.15 கோடி ரூபாய் செலவிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெருவில், மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கைகள் கொண்ட ஒப்பனை அறை கட்ட, நேற்று காலை அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில், வடசென்னை தி.மு.க., - எம்.பி., கலாநிதி, மாதவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனம் உள்ளிட்டோர் பங்கேற்று, அடிக்கல் நாட்டினர்.
காலடிப்பேட்டை, மார்க்கெட் லைன் தெருவில், அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், நுாலகம் கட்டடம் கட்ட, அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மண்டல உதவி கமிஷனர் விஜயபாபு, வார்டு கவுன்சிலர் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராஜாஜி நகர், சவுந்திரபாண்டியன் நகரில், 35 லட்ச ரூபாய் செலவில், 110 தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்கு, தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு, அடிக்கல் நாட்டினார்.