/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.12 கோடியில் திட்டங்கள் துவக்கம்
/
ரூ.12 கோடியில் திட்டங்கள் துவக்கம்
ADDED : பிப் 05, 2026 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டூர்புரம்: கோட்டூர்புரத்தில், 12.38 கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்களை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.
அடையாறு மண்டலம், 170வது வார்டு, பள்ளிப்பட்டு பிரதான சாலையில், 40.42 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட மகளிர் உடற்பயிற்சி கூடத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, அதே வார்டில், 6 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால்வாய் பணி, சித்ரா நகர் அரசு பள்ளியில், 5 கோடி ரூபாயில் கூடுதல் வகுப்பறைகள், பள்ளிப்பட்டு பகுதியில் 75 லட்சம் ரூபாயில் ஆண்கள் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட உள்ளது.
அதேபோல், கோட்டூர்புரம் நுாலகம் எதிரே, 23 லட்சம் ரூபாயில் நிழற்குடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

