ADDED : செப் 23, 2025 01:14 AM
சென்னை:சென்னை மாநகராட்சிக் கான சொத்து வரி இந்த நிதியாண்டில் இதுவரை, 900 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வரி வருவாயில், சொத்து வரி, தொழில் வரி ஆகியவை பிரதானமாக உள்ளது. ஆண்டுக்கு, 2,023 கோடி ரூபாய் வரை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, 2025 - 26ம் நிதியாண்டில் சொத்து வரி வசூலிக்கும் பணியில், மாநகராட்சி வருவாய் அலுவலர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
மாநகராட்சி சொத்து வரியை பொறுத்தவரையில், இரண்டு அரையாண்டுகளாக சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், அரையாண் டின் முதல் 30 நாட்களில் சொத்துவரி செலுத்துவோருக்கு, 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படு கிறது. முறையாக சொத்து வரி செலுத்தாமல் இருந்தால், தனி வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த நிதியாண்டில் இதுவரை, 900 கோடி ரூபாயை மாநகராட்சி சொத்துவரி வசூலித்து உள்ளதாக, மாநகராட்சி வருவாய் அலுவலர்கள் தெரிவித்தனர்.