/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகை கடையில் கைவரிசை கணக்காளருக்கு 'காப்பு'
/
நகை கடையில் கைவரிசை கணக்காளருக்கு 'காப்பு'
ADDED : நவ 17, 2024 12:09 AM
சென்னை திருவல்லிக்கேணியில், பணிபுரிந்த நகைக்கடையில், இரண்டே கால் சவரன் நகை திருடிய கணக்காளரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவல்லிக்கேணி, பெரிய தெருவைச் சேர்ந்தவர் முனீருதீன், 50. இவர், ஜாம்பஜார் பாரதி சாலையில், ஏ.ஜே.ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
அவரது கடையில், திருவாரூரைச் சேர்ந்த முகமது பாசித், 25, என்பவர், கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி கடையின் உரிமையாளர், அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை சரிபார்த்தார்.
அப்போது, 2ம் தேதியன்று வாடிக்கையாளர் ஒருவர் அடகு வைத்துச் சென்ற நகை காணாமல் போனது தெரிந்தது. பின், கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, கணக்காளர் 7ம் தேதியன்று மதியம் நகையை திருடியது தெரிந்தது.
சம்பவம் குறித்து கடை உரிமையாளர், 13ம் தேதி, ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த தனிப்படை போலீசார், திருவாரூரில் மறைந்திருந்த முகமது பாசித்தை கைது செய்து, இரண்டே கால் சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.