/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார் ஓட்டுநரை தாக்கி மிரட்டியவருக்கு 'காப்பு'
/
கார் ஓட்டுநரை தாக்கி மிரட்டியவருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 08, 2025 01:06 AM
சென்னை, நெற்குன்றம், ஜெய்நகர், 10வது தெருவைச் சேர்ந்தவர் பாவா பக்ருதீன், 50; கால்டாக்சி ஓட்டுநர். கடந்த 5ம் தேதி, அதிகாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் சவாரிக்காக காத்திருந்தார்.
அப்போது, கரையான்சாவடியைச் சேர்ந்த சுரேஷ்குமார், 39, என்பவர், அவரிடம் வீண் தகராறு செய்து, கை மற்றும் கல்லால் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.
இதில் காயமடைந்த பாவா பக்ருதீன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின்படி, நேற்று சுரேஷ்குமார் கைது செய்து விசாரித்தனர்.
நுங்கம்பாக்கம் பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணை, திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி, சுரேஷ்குமார் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்படி, சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த சுரேஷ்குமார், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
சம்பந்தப்பட்ட பெண் சுரேஷ்குமாரை திருமணம் செய்து கொள்ளாததற்கு, அவரிடம் கார் ஓட்டுநராக பணிபுரியும் பாவா பக்ருதீன் தான் காரணம் என நினைத்து, அவரை சுரேஷ்குமார் தாக்கியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.