/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' ஜிம் ' முக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறிய டிரெய்னருக்கு ' காப்பு '
/
' ஜிம் ' முக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறிய டிரெய்னருக்கு ' காப்பு '
' ஜிம் ' முக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறிய டிரெய்னருக்கு ' காப்பு '
' ஜிம் ' முக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறிய டிரெய்னருக்கு ' காப்பு '
ADDED : ஜன 18, 2025 12:25 AM

கீழ்ப்பாக்கம், ஓட்டேரியைச் சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். உடல் எடையை குறைப்பதற்காக, அப்பெண் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் உடற்பயிற்சி நிலையத்தில், சில மாதங்களுக்கு முன் சேர்ந்தார்.
அவருக்கு, யானைகவுனியைச் சேர்ந்த சூர்யா, 28, என்பவர் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
சூர்யா அவருக்கு அக்கறையுடன் பயிற்சி அளிப்பது போன்று நடித்து நெருக்கமாக பழகி உள்ளார். இதனால் ஏற்பட்ட பழக்கம், அடிக்கடி மொபைல் போனில் பேசும் அளவிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சூர்யாவின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால், கடந்த டிசம்பரில் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணும் சூர்யாவிடம் பழகுவதை தவிர்த்துள்ளார்.
ஆத்திரமடைந்த சூர்யா, அப்பெண் செல்லும் இடங்களில் சென்று, தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி உடற்பயிற்சி நிலையத்திற்கு வந்த பெண்ணை, சூர்யா வழிமறித்து கன்னத்தில் அடித்து, பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார்.
இது குறித்து அப்பெண் கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், சூர்யா அப்பெண்ணிற்கு தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, சூர்யாவை போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.