sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்ற ஆர்ப்பாட்டம்

/

ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்ற ஆர்ப்பாட்டம்

ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்ற ஆர்ப்பாட்டம்

ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்ற ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 11, 2024 12:10 AM

Google News

ADDED : டிச 11, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தமிழகத்தில், 2013ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை அரசு மாற்றி அமைத்தது. அரசு பல கட்ட பேச்சு நடத்தியும், கட்டணத்தை இன்னும் மாற்றியமைக்கவில்லை.

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்; டூ வீலர் பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டும்; ஓலா, உபர் நிறுவனங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை தீர்க்க வேண்டும் என்பது உட்பட, 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, சைதாபேட்டையில் தொழில்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில், சென்னை மாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கம், உரிமை குரல் ஓட்டுனர் சங்கம், உரிமை கரங்கள் ஓட்டுனர்கள் சங்கம், சிகரம் ஓட்டுனர் தொழிற்சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, கிண்டி உள்ள மாநில போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற, 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us