/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியை தாக்கிய ஆசிரியை மீது வன்கொடுமை வழக்கு பதிய மறியல்
/
மாணவியை தாக்கிய ஆசிரியை மீது வன்கொடுமை வழக்கு பதிய மறியல்
மாணவியை தாக்கிய ஆசிரியை மீது வன்கொடுமை வழக்கு பதிய மறியல்
மாணவியை தாக்கிய ஆசிரியை மீது வன்கொடுமை வழக்கு பதிய மறியல்
ADDED : நவ 04, 2025 12:26 AM

மடிப்பாக்கம்: மாணவியை தாக்கிய விவகாரத்தில், ஆசிரியை மீது வழக்குப் பதியக்கோரி, 50க்கும் மேற்பட்டோர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
புழுதிவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும் மாணவி, கடந்த 8ம் தேதி வகுப்பறையில் மை சிந்தியதற்காக, பள்ளி தலைமை ஆசிரியை இந்திராகாந்தி சரமாரியாக அடித்து உள்ளார்.
இதில், குழந்தையின் உடல் முழுதும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இது குறித்த புகாரை அடுத்து, சிறார் நீதி, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் மற்றும் பி.என்.எஸ்., சட்டத்தின் கீழ், தலைமை ஆசிரியை மீது மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியக்கோரி, மடிப்பாக்கம் கூட்டுச் சாலையில், நேற்று மாலை 5:00 மணியளவில், கண்டனக் கூட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நடத்தினர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, 50 பேரை, மடிப்பாக்கம் போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்து, இரவு விடுதலை செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பெற்றோர் கொடுத்த புகார் மனு மீது, சட்டத்திற்கு உட்பட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம்.
'தவிர, மருத்துவமனை அறிக்கையில், அச்சிறுமிக்கு தலையில் காயம் ஏதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்தனர்.

