/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 27, 2025 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடி பகுதி அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., திடலில், அமைச்சர் பொன்முடியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், நேற்று நடந்தது.
இதில், அ.தி.மு.க., மாவட்ட கழக செயலர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். 'பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கட்சி கொடி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க, ஆவடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.