/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிய எடை மேடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
/
புதிய எடை மேடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 01, 2024 12:26 AM

அம்பத்துார், புதிய எடைமேடைகள் அமைந்தால், போக்குவரத்து நெரிசலால், அவதிப்பட நேரிடும் என, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னை அம்பத்துார், பட்டரைவாக்கம், இ.பி., சாலையையொட்டி, 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலை மற்றும் இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.
அங்குள்ள எடை மேடை மற்றும் தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்களால் நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் மேலும் இரண்டு புதிய எடைமேடைகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
அவை செயல்பாட்டிற்கு வந்தால், நெரிசல் மேலும் அதிகரிக்கும் என கூறி, பட்டரைவாக்கம் சேவா சங்கம், அம்பேத்கர் பொதுநல சங்கத்தினர் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். அதன் பின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

