/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முருகன் கோவில் இடிப்புக்கு எதிர்ப்பு; தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைப்பு
/
முருகன் கோவில் இடிப்புக்கு எதிர்ப்பு; தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைப்பு
முருகன் கோவில் இடிப்புக்கு எதிர்ப்பு; தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைப்பு
முருகன் கோவில் இடிப்புக்கு எதிர்ப்பு; தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைப்பு
ADDED : ஆக 21, 2025 10:47 AM

புளியந்தோப்பு: புளியந்தோப்பில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த முருகன் கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் சாலையில் பழமையான முருகன் கோவில், சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்தது. நேற்று மதியம் கோவிலையும் சுற்றியிருந்த பாழடைந்த வீட்டையும், இடிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டனர்.
முருகன் கோவிலை இடிப்பதாக தகவல் பரவிய நிலையில், பாரத் ஹிந்து முன்னணியைச் சேர்ந்த மாநில தலைவர் ஆர்.டி.பிரபு உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர், சம்பவ இடத்திற்கு சென்றனர். கோவிலை இடிக்க விடாமல் தடுத்தனர். இது குறித்து போலீசாருக்கும், மாநகராட்சிக்கும் புகார் அளிக்கப்பட்டது .
கோவில் இடத்தை வாங்கிய நபர், அதற்கான ஆதாரம் இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆவணங்களை கொண்டு வந்து காட்டிவிட்டு, சரியானதாக இருந்தால் அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதையடுத்து கோவில் இடிக்கும் பணி, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
பாரத் ஹிந்து முன்னணியைச் சேர்ந்த மாநில தலைவர் ஆர்.டி.பிரபு கூறியதாவது:
நுாற்றாண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த முருகன் கோவிலில் இருந்து தான், பலவித காவடிகளை பக்தர்கள் சுமந்து, திருப்போரூர் வரை நடந்து செல்வர்.
பராமரிப்பில்லாத நிலையில், இதை ஹிந்து சமய அறநிலையத் துறை மீட்டு புதுப்பித்திருக்க வேண்டும். மாறாக வேறு ஒருவர் வந்து நிலத்தை வாங்கிவிட்டதாக கூறி, சுவாமி சிலைகளை இடித்து அகற்றியுள்ளார். இதை நாங்கள் கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.