/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைதை விடுதியில் போராட்டம் வெளி மாணவர்கள் துாண்டுதல்?
/
சைதை விடுதியில் போராட்டம் வெளி மாணவர்கள் துாண்டுதல்?
சைதை விடுதியில் போராட்டம் வெளி மாணவர்கள் துாண்டுதல்?
சைதை விடுதியில் போராட்டம் வெளி மாணவர்கள் துாண்டுதல்?
ADDED : டிச 13, 2025 05:10 AM
சென்னை: 'சைதாப்பேட்டை, எம்.சி., ராஜா விடுதியில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு, வெளி மாணவர்களின் துாண்டுதலே காரணம்' என, ஆதிதிராவிடர் நலத்துறை தெரிவித்துள்ளது.
ஆதிதிராவிட நலத்துறை வெளியிட்ட அறிக்கை:
சைதாப்பேட்டை எம்.சி., ராஜா கல்லுாரி மாணவர் புதிய விடுதியில், 484 மாணவர்கள் உள்ளனர். இங்கு, தரமான உணவு, உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், 'அமுதசுரபி' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் மாணவர்களின் கருத்து, விடுதி காப்பாளர்கள் வாயிலாக பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்படுகிறது.
உணவு தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடியும் நிலையில் உள்ளது. எனவே, புதிய டெண்டர் கோரும்போது, புதிய உணவு பட்டியலின்படி, மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும்.
மாணவர் அல்லாத சில வெளிநபர்களின் துாண்டுதலால், விடுதியில் மாணவர் போராட்டம் என்ற பெயரில், தவறான தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளன.
புதிய, பழைய மாணவர் விடுதிகளில், போதிய வசதியுடன் மாணவர்கள் தங்கியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

