/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்
/
ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்
ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்
ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 10, 2026 05:27 AM

சென்னை: ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, எஸ்.ஆர்.எம்.யு., சார்பில், சென்ட்ரல் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை ரயில்வே கோட்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு, பணியின் போது பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாக, ஏற்கனவே குற்றஞ்சாட்டி பல முறை ஆர்ப்பட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், சென்னை புறநகர் ரயில் நிலையத்தில், டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட பெண் பரிசோதகரை, வடமாநில வாலிபர் ஒருவர் தாக்கியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, கடந்த 4ம் தேதி, மற்றொரு டிக்கெட் பரிசோதகரை, வடமாநில வாலிபர் தாக்கி காயப்படுத்தி உள்ளார்.
எனவே, டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், நேற்று எஸ்.ஆர்.எம்.யு., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, எஸ்.ஆர்.எம்.யு., டிக்கெட் பரிசோதகர்கள் பிரிவு துணை பொதுச்செயலர் யுவராஜ் தலைமை வகித்தார். எஸ்.ஆர்.எம்.யு., சென்னை கோட்ட செயலர் பால்மாக்ஸ்வெல் ஜான்சன் பங்கேற்று, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

