/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலைமை ஆசிரியரை இடமாற்ற அரசு பள்ளி முன் போராட்டம்
/
தலைமை ஆசிரியரை இடமாற்ற அரசு பள்ளி முன் போராட்டம்
ADDED : பிப் 11, 2024 12:31 AM
செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஊராட்சி பாப்பான் சத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு தமிழ், கணக்கு பாடங்கள் பயிற்றுவிக்கும் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி, நேற்று மதியம் பெற்றோர் மற்றும் மாணவ - மாணவியர், பள்ளி வளாகத் தில் போராட்டத்தில் ஈடுட்டனர்.
இது குறித்து பெற்றோர் கூறியதாவது:
பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லை. தலைமை ஆசிரியராக பணிபுரியும் சேர்ந்த கார்த்திகா, 48, தமிழ் மற்றும் கணக்குப் பாடங்களை பயிற்றுவிக்கிறார். இவர், அடிக்கடி விடுப்பு எடுக்கிறார்.
முக்கியமாக, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு செய்தித்தாள் தலைப்பு கூட வாசிக்கத் தெரியவில்லை.
எனவே, தலைமை ஆசிரியரை உடனடியாக மாற்றி, சேவை மனப்பான்மை உள்ள, தகுதியான தலைமை ஆசிரியரை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தகவல் அறிந்து வந்த ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பள்ளி பராமரிப்பு குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சில் ஈடுபட்டு, தீர்வு எடுப்பதாக கூறியதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.