UPDATED : ஜூலை 20, 2026 09:59 PM
ADDED : ஜூலை 20, 2026 09:44 PM
* ஐ.டி.பி.ஐ., வங்கியின் மண்டல அலுவலகம் கிண்டியில் உள்ளது. வங்கியை தனியார்மயமாக்கும் திட்டத்தை எதிர்த்து, 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் , கிண்டியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்; மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
--
மடிப்பாக்கத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் வருவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, குழாய் பதிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், 69 தெருக்களில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சோதனை ஓட்டத்தில் நடந்த குறைபாடு விரைவில் தீர்க்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
---
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 1.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை, கலெக்டர் மாலதி ஹெலன் வழங்கினார். மேலும், வீட்டுமனை பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட 150 மனுக்கள் பெற்றார்.
