/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டாஸ்மாக்'கிற்கு எதிர்ப்பு கொரட்டூரில் போராட்டம்
/
'டாஸ்மாக்'கிற்கு எதிர்ப்பு கொரட்டூரில் போராட்டம்
'டாஸ்மாக்'கிற்கு எதிர்ப்பு கொரட்டூரில் போராட்டம்
'டாஸ்மாக்'கிற்கு எதிர்ப்பு கொரட்டூரில் போராட்டம்
ADDED : டிச 22, 2025 05:01 AM

கொரட்டூர்: கொரட்டூர் ஏரியில் மது பாட்டில்களும், பிளாஸ்டிக் பொருட்களும் வீசுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 'டாஸ்மாக்' கடை வாசலில், கையில் பதாகை ஏந்தியபடி, பெண்களும், குழந்தைகளும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரட்டூர், வாட்டர் கெனால் சாலையில் அமைந்துள்ள 'டாஸ்மாக்' கடையில், மது பிரியர்கள் மதுவை வாங்கி, அதை அருகில் உள்ள கொரட்டூர் ஏரியின் நடைப்பாதைக்கு கொண்டு சென்று அருந்துகின்றனர். அவர்கள் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை ஏரிக்குள் வீசி செல்கின்றனர்.
மது பாட்டில்களை உடைத்து நடைபாதையில் போட்டு விட்டு செல்வதால், சிதறி கிடக்கும் கண்ணாடி துகள்களை கண்டு, நடைபயிற்சி மேற்கொள்வோர் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், நுாதனமான முறையில் நேற்று விழிப்புணர்வு பரப்புரை நடந்தது.
அதில், 'மது பிரியர்களே! மது பாட்டில்களையும், பிளாஸ்டிக் பொருட்களையும் ஏரியில் வீச வேண்டாம்' என்கிற வாசகம் அடங்கிய, பதாகைகளை பெண்கள், குழந்தைகள் கையில் ஏந்தி, டாஸ்மாக் கடைக்கு வந்த மது பிரியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அசம்பாவிதத்தை தவிர்க்க, கொரட்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

