தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குடிநீரில் கழிவுநீர் கலப்பு: பெருங்குடியில் போராட்டம்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு: பெருங்குடியில் போராட்டம்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு: பெருங்குடியில் போராட்டம்


UPDATED : செப் 05, 2026 11:33 PM

ADDED : செப் 05, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2026 11:33 PM ADDED : செப் 05, 2026 10:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளிக்கரணை: குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து, பெருங்குடி மயிலை பாலாஜி நகரில், அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

பெருங்குடி மண்டலம், மயிலை பாலாஜி நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும், கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், வி.சி.க.,வினருடன் இணைந்து அப்பகுதி மக்கள் நேற்று மாலை 5:00 மணிக்கு, வேளச்சேரி பிரதான சாலை அருகே, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில், கழிவுநீர் அடைப்பை சீர்செய்து, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும். கொசு மருந்து தெளித்து மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். சீரான மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷமிட்டனர்.

தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், திங்கள்கிழமை பெருங்குடி மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us