/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி சோழிங்கநல்லுாரில் ஆர்ப்பாட்டம்
/
வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி சோழிங்கநல்லுாரில் ஆர்ப்பாட்டம்
வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி சோழிங்கநல்லுாரில் ஆர்ப்பாட்டம்
வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி சோழிங்கநல்லுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 27, 2025 05:19 AM

சோழிங்கநல்லுார்: ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., இணைப்பு சாலையில், வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி, சோழிங்கநல்லுாரில் நேற்று நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழிங்கநல்லுார் தொகுதிக்குட்பட்ட செம்மஞ்சேரி வார்டில் எழில்முக நகர், ஜவகர் நகர் பகுதியில், சர்வே எண்: 394, 395ல் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அக் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும், 12 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட, 56 பேருக்கான பட்டாவை கணினியில் பதிவேற்றவும் வலியுறுத்தி, சோழிங்க நல்லுார் - -அக்கரை சாலையில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:
பெருங்குடி, தரமணி, கோவிலம்பா க்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த எங்களை, கடந்த 1998ம் ஆண்டு, செம் மஞ்சேரி வார்டுக்கு உட்பட்ட எழில்முக நகர், ஜவகர் நகர் பகுதியில் இடமாற்றம் செய்தனர்.
அரசு வழங்கப்பட்ட இடத்தில் தான், 400 குடும்பங்களை சேர்ந்தோர் வசித்து வருகிறோம். 12 ஆண்டுகளுக்கு முன், 56 வீடுக ளுக்கு மட்டும் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதுவும் கணினியில் பதிவேற்றப்படவில்லை.
எனவே, ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாக்களை கணினியில் பதிவேற்றவும், வழங்கப்படாத குடும்பத்தினருக்கு, உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

