/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடப்பில் சுரங்கப்பாதை பணி திருவொற்றியூரில் ஆர்ப்பாட்டம்
/
கிடப்பில் சுரங்கப்பாதை பணி திருவொற்றியூரில் ஆர்ப்பாட்டம்
கிடப்பில் சுரங்கப்பாதை பணி திருவொற்றியூரில் ஆர்ப்பாட்டம்
கிடப்பில் சுரங்கப்பாதை பணி திருவொற்றியூரில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 30, 2024 01:27 AM

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மேற்கு, அண்ணாமலை நகர், பாலகிருஷ்ணா நகர், காமராஜர் நகர், ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அண்ணாமலை நகர் ரயில்வே கேட் வழியாக, திருவொற்றியூர் கிழக்கு மற்றும் நெடுஞ்சாலை பகுதிக்கு சென்று வந்தனர்.
ரயில்வே கேட்டை கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, 30 கோடி ரூபாய் செலவில், இருவழிப்பாதை கொண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி, 2022ல் துவங்கியது. இதனால், பல கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
இதனிடையே, ரயில்வே சுரங்கப்பாதை பணிகள், மண் சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மந்தகதியில் நடந்து வருகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் மீண்டும் அபாயகரமான முறையில், ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலைமை நீடிக்கிறது.
இதை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி, திருவொற்றியூர் தெற்கு பகுதி குழு செயலர் கருணாநிதி தலைமையில், நேற்று காலை, அண்ணாமலை ரயில்வே கேட் பகுதியில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அகற்றப்பட்ட வீடுகள்,கடைகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
பணிகள் முடியும் வரை, மாற்று பாதையாக தனியாக கேட் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.

