/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது குழாயில் கழிவுநீர் இணைப்பு திருவொற்றியூரில் மறியல் போராட்டம்
/
பொது குழாயில் கழிவுநீர் இணைப்பு திருவொற்றியூரில் மறியல் போராட்டம்
பொது குழாயில் கழிவுநீர் இணைப்பு திருவொற்றியூரில் மறியல் போராட்டம்
பொது குழாயில் கழிவுநீர் இணைப்பு திருவொற்றியூரில் மறியல் போராட்டம்
ADDED : ஜூலை 18, 2025 12:26 AM

திருவொற்றியூர், தனியார் அடுக்குமாடி குடியிருப்பின், பாதாள சாக்கடை குழாயை, மற்ற பகுதிகளுக்கான பொது குழாயில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து முடங்கியது.
திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், தனியார் கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைத்துள்ளது.
இந்த குடியிருப்புகளுக்கான பாதாள சாக்கடை இணைப்பை, ஜீவன்லால் நகர், மாணிக்கம் நகர், அஞ்சுகம் நகர் பகுதிகளுக்கான பிரதான பாதாள சாக்கடையுடன் இணைக்க, நேற்று மதியம் முயற்சி நடந்தது.
தகவலறிந்த ஜீவன்லால் நகர், மாணிக்கம் நகர் மக்கள், திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தின்கீழ், நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தனி குழாய் அமைத்து அடுக்குமாடி குடியிருப்பின், கழிவுநீர் கொண்டு செல்ல வேண்டும் என, அவர்கள் கோரினர். தகவலறிந்து அங்கு வந்த, கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர்.
மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.