/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
/
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
ADDED : ஜூலை 12, 2025 12:19 AM

திருவொற்றியூர், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், வருவாய் துறை அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்தனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த சுனிதா, கோகிலா ஆகிய இருவரும் தொடர்ந்த வழக்கில், திருவொற்றியூர் ராமநாதபுரம், 10வது தெருவில் உள்ள, 30,057 சதுர அடியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள், சம்பவ இடத்தில் பொக்லைன் இயந்திரங்களுடன் முகாமிட்டு, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால், வீடுகளை அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என, அப்பகுதியினர் கோரினர்.
இதற்கிடையில், சுவாதி எனும் மாற்றுத்திறனாளி பெண், 'ஜெய்சங்கர் என்பவரிடம், 1,000 சதுர அடி நிலத்தை, 16 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். தற்போது, நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்றினால் எங்கு செல்வோம்' என, தாசில்தாரிடம் கண்ணீர் மல்க வாக்குவாதம் செய்தார்.
மாநகராட்சி ஒத்துழைப்பின்மை மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவியதால், வருவாய் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கும் பணியை பாதியில் நிறுத்தினர். மேல் அதிகாரிகளிடம் கேட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி திரும்பி சென்றனர்.