/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காளி சிலையால் மீண்டும் போராட்டம்: எண்ணுார் நெட்டுக்குப்பத்தில் பதற்றம்
/
காளி சிலையால் மீண்டும் போராட்டம்: எண்ணுார் நெட்டுக்குப்பத்தில் பதற்றம்
காளி சிலையால் மீண்டும் போராட்டம்: எண்ணுார் நெட்டுக்குப்பத்தில் பதற்றம்
காளி சிலையால் மீண்டும் போராட்டம்: எண்ணுார் நெட்டுக்குப்பத்தில் பதற்றம்
ADDED : டிச 16, 2025 06:50 AM

எண்ணுார்: எண்ணுார் நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக், 38, இவர் பிப்ரவரியில் தன் வீட்டில், 4 அடி உயர தட்சிண காளி சிலையை நிறுவினார். காளி சிலையால், தொழில் பாதிப்பு, ஊருக்குள் மரணங்கள் ஏற்படுவதால், உடனே அகற்றிட வேண்டும் என, நெட்டுக்குப்பம் கிராமத்தினர் கூறினர்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை இருந்ததால், திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி, சிலையை அகற்றி தாசில்தார் அலுவலகத்தில் வைத்திருந்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கார்த்திக்கிடம் சிலையை ஒப்படைக்க, வருவாய் துறை அதிகாரிகள் முயன்றனர். தகவலறிந்த நெட்டுகுப்பம் கிராம மக்கள், இரு தினங்களுக்கு முன் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம், வருவாய் துறையினர், கார்த்திக்கிடம் சிலையை ஒப்படைத்தனர். சிலைய பெற்ற கார்த்திக், 'டாடா மேஜிக்' வாகனத்தில் சிலையை ஏற்றிக்கொண்டு, போலீஸ் பாதுகாப்புடன் நெட்டுக்குப்பம் திரும்பினார்.
இதையறிந்த, நெட்டுக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள், 500 க்கும் மேற்பட்டோர், வாயில் கருப்பு துணி கட்டி, ஊருக்குள் செல்ல விடாமல் சாலையை மறித்தனர்.
எண்ணுார் போலீஸ் உதவி கமிஷனர் வீரகுமார், கார்த்திக்கை அழைத்து ஊர் மக்களிடம் பேச்சு நடத்தினார். அப்போது, ஊருக்குள் சிலையை கொண்டு வர விடமாட்டோம் என, பொதுமக்கள் கோஷமிட்டனர். பின், சிலையை வேறு ஊருக்கு கொண்டு செல்வதாக கூறி, கார்த்திக் புறப்பட்டார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அப்பகுதியினர் கலைந்து சென்றனர்.

