ADDED : மார் 21, 2026 08:58 PM
அ நிறம் | அளவு
சென்னை: வேனில் போதை பொருட்கள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாப்பூர், முசிறி சுப்பிரமணியன் தெருவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலாஜி தலைமையில் அதிகாரிகள், நேற்று முன்தினம் நள்ளிரவு 11:45 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த மாருதி ஆம்னி வேனை மடக்கி சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட, 'ஹான்ஸ்' உள்ளிட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. கார் ஓட்டுநர் உட்பட இருவரையும் மயிலாப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், ஆவடியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், 49, மயிலாப்பூரைச் சேர்ந்த சிவா, 33, என்பதும், இருவரும் புரோட்டா மாஸ்டராக பணிபுரிவதும் தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
