ADDED : ஆக 18, 2026 05:52 PM
சென்னை: வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், தொழிலாளர்களை சேர்ப்பதற்கு அக்., 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மண்டல கமிஷனர் வெளியிட்ட அறிக்கை:
வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இருந்து வெளியேறிய நபர்கள், மீண்டும் தானாக முன்வந்து இணையும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தகுதி உள்ள நபர்களை தொழில் நிறுவனங்கள் தாங்களாகவே இணைப்பதற்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஏப்., 1 முதல் 2026 மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில் விடுபட்ட நபர்கள், இந்த முகாமில் சேர்ந்து பயன்பெறலாம்.
அக்., 31 வரை இந்த வாய்பை பயன்படுத்திக்கொள்ள கால அவகாசம் வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகரில் உள்ள தொழில் நிறுவனங்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது தொடர்பாக தொழிலாளர்கள், வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தின் சென்னை தெற்கு பிரிவை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
