/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்கல்
/
விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்கல்
ADDED : பிப் 17, 2024 12:38 AM

சென்னை,
சென்னையில் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடந்தன. அவற்றில், நீச்சல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற நிதிக் நாதெல்லா, வரும் 23ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை, பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கவுள்ள 11வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.
அதில் பங்கேற்பதற்கான செலவுத் தொகையாக, 1.36 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, தமிழக சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேற்று வழங்கினார்.
அதேபோல், சர்வதேச அளவிலான பாரா சாம்பியன்ஷிப் போட்டிகள், ஐ.டபிள்யூ.ஏ.எஸ்., போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற ஜெகதீஸ் டில்லிக்கு, பாரா பேட்மின்டன் போட்டிக்கான உபகரணங்கள் வாங்க, 1 லட்சம் ரூபாயையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.