/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.48 கோடியில் நலத்திட்ட உதவிகள் 165 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கல்

ADDED : மார் 11, 2024 01:29 AM
சைதாப்பேட்டை:சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 165 பயனாளிகளுக்கு 1.48 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், கோடம்பாக்கம் மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மவட்ட வருவாய் அலுவலர் அனுஷியா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், இரு கால்கள் பாதிக்கப்பட்ட 140 மாற்றுத்திறனாளிகளுக்கு, 96,000 ரூபாய் மதிப்புள்ள தலா ஒரு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
மத்திய அரசு பட்டியலில், 21 வகையான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். ஆனால், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக 6 - 7 பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
சட்டசபையில் என் கன்னிப்பேச்சில், மாற்றுத்திறனாளிகள் உரையாக அமைந்தது. அதில், 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
இவ்வாறு மாற்றுத்திறனாளிகளுக்காக, தி.மு.க., அரசு சார்பில், ஏராளமான திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
என்னை சந்திப்பது மிக எளிமையான ஒன்று. உங்களுக்கு எந்த உதவிகள் தேவைப்பட்டாலும், என்னை அணுகலாம்; மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் உங்கள் இடையே நான் இணைப்பு பாலமாக செயல்படுவேன். தி.முக., கூட்டணி, மிகப் பெரிய வெற்றியை நோக்கி, படுவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
1977ல் நடந்த லோக்சபா சேர்தலில், பீஹார் மாநிலத்தில் ராம் விலாஸ் பஸ்வான் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெற்று, உலக சாதனை படைத்தார்.
பின், ஆந்திரா மாநிலத்தில் 1980ல் நடந்த தேர்தலில் பி.வி., நரசிம்ம ராவ் 5 லட்சம் ஓட்டுகளை பெற்றார்.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் ஸ்ரீபெரும்புதுார் மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் தி.மு.க., வேட்பாளர்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெற்றனர்.
மக்களிடம் உள்ள எழுச்சியைக் காணும்போது, வரும் லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளில் 5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வெற்றி பெறும்
தி.முக., கூட்டணி, மிகப் பெரிய வெற்றியை நோக்கி, படுவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. 1977ல் நடந்த லோக்சபா சேர்தலில், பீஹார் மாநிலத்தில் ராம் விலாஸ் பஸ்வான் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெற்று, உலக சாதனை படைத்தார். பின், ஆந்திரா மாநிலத்தில் 1980ல் நடந்த தேர்தலில் பி.வி., நரசிம்ம ராவ் 5 லட்சம் ஓட்டுகளை பெற்றார்.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் ஸ்ரீபெரும்புதுார் மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் தி.மு.க., வேட்பாளர்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெற்றனர்.
மக்களிடம் உள்ள எழுச்சியைக் காணும்போது, வரும் லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளில் 5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
- மா.சுப்பிரமணியன்,
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.