/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நவ., 1 , 2ம் தேதிகளில் 'புரொவோக் ஆர்ட் பெஸ்டிவல்'
/
நவ., 1 , 2ம் தேதிகளில் 'புரொவோக் ஆர்ட் பெஸ்டிவல்'
ADDED : அக் 30, 2025 12:29 AM
சென்னை: நடப்பாண்டிற்கான 'புரொவோக் ஆர்ட் பெஸ்டிவல்' கலாசார விழா, ராயப்பேட்டையில் உள்ள 'தி மியூசிக் அகாடமி'யில் வரும் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடக்க உள்ளது.
இவ்விழா, இந்தியாவின் வளமான கலை செழுமைக்கு மரியாதையாக சமர்ப்பிக்கப்படுகிறது. புதுமையான அணுகுமுறைகளை அங்கீகரிக்கும் வகையில், இரண்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவில், பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.
இந்திய மரபுக் கலை வடிவங்களை முன்னிறுத்துவதன் மூலம் தென்னிந்தியாவின் கலாசார தலைநகராக சென்னை மீண்டும் உறுதி செய்யப்பட உள்ளது.
இதில் மேலும் ஒரு சிறப்பம்சமாக கலை, இசை, நடனம் மற்றும் நாடகத் துறைகளில் சிறப்பாக செயல்படும் கலைஞர்கள் மற்றும் புகழ் பெற்றோரை கவுரவிக்கும் வகையில், 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட உள்ளது.
வரும் நவ.,1ம் தேதி, மாலை 5:00 மணிக்கு துவங்கும் இவ்விழாவில், கலைஞர்கள் ருக்மிணி விஜய்குமார், சுபஸ்ரீ தணிகாசலம், ஹரிசரண், சாய் விக்னேஷ், திஷா பிரகாஷ் ஆகியோரும், நவ., 2ம் தேதியன்று, கலைஞர்கள் ரோஹிணி, பிரலயன், ராஜேஷ் வைத்யா, ராகுல் வெல்லால் மற்றும் ஸ்பூர்த்தி ராவ் உள்ளிட்டோரின் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இவ்விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம். இலவச நுழைவுச் சீட்டுக்கு, 98414 33211, 98849 46548 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

