/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் கல்லுாரி 14வது பட்டமளிப்பு விழா
/
பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் கல்லுாரி 14வது பட்டமளிப்பு விழா
பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் கல்லுாரி 14வது பட்டமளிப்பு விழா
பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் கல்லுாரி 14வது பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 26, 2025 02:49 AM

சென்னை:வண்டலுாரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த 14வது பட்டமளிப்பு விழாவில் 2,518 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
சென்னை, பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. அதில், மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இயக்குனர் வெள்ளைப்பாண்டி, 65 தங்கப்பதக்கம், 59 பி.எச்டி., 708 முதுகலை, 1751 இளங்களை என, மொத்தம் 2,518 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, வாழ்த்தினார்.
நிகழ்வில், பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல், தொழில்நுட்ப நிறுவன அதிபர் பி.எஸ்.ஏ., ஆரிப் புகாரி ரஹ்மான், துணை அதிபர் அப்துல் காதிர் ஏ.ரஹ்மான் புஹாரி, குழு உறுப்பினர் அஷ்ரப் அப்துல் ரஹ்மான் புகாரி, அஹமது புகாரி, மரியம் புஹாரி, துணைவேந்தர் முருகேசன், சார்பு துணைவேந்தர் தாஜுதீன், பதிவாளர் ராஜா உசேன், தேர்வுக்கட்டுப்பாட்டாளர் காஜா மொஹைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.