/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேத்தியை தேடிய பாட்டி கிணற்றில் தவறி விழுந்து பலி
/
பேத்தியை தேடிய பாட்டி கிணற்றில் தவறி விழுந்து பலி
ADDED : ஆக 06, 2025 12:26 AM
ஆவடி,வீட்டு வாசலில் விளையாடிய பேத்தியை தேடி சென்ற பாட்டி, கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
ஆவடி அடுத்த பட்டாபிராம், சார்லஸ் நகரைச் சேர்ந்தவர் செல்வி, 65. இவரது மருமகள் வேலைக்கு செல்வதால், இரண்டரை வயது பேத்தியை வீட்டில் வைத்து கவனித்து கொள்வார்.
நேற்று முன்தினம், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பேத்தி மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால், வீட்டை ஒட்டியுள்ள 35 அடி ஆழ கிணற்றில் பாட்டி எட்டி பார்த்துள்ளார். அப்போது, கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தார்.
செல்வி விழுவதை பக்கத்து வீட்டில் இருந்து பார்த்து கொண்டிருந்த பெண், உடனடியாக தீயணைப்பு துறைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் தெரிவித்தார்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், செல்வியைச் சுற்றி கயிறு கட்டி, மேலே கொண்டு வந்தனர். ஆவடி அரசு மருத்துவமனையில் செல்வியை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். பட்டாபிராம் போலீசார், உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர். செல்வியின் பேத்தி, பக்கத்து வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.