/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது - பூஜை செய்வதாக கூறி நகைகள் திருடியவர் கைது
/
பொது - பூஜை செய்வதாக கூறி நகைகள் திருடியவர் கைது
ADDED : ஆக 23, 2025 11:26 PM

அம்பத்தூர், குடும்ப பிரச்னை தீர்க்க பூஜை செய்வதாக கூறி, பெண்ணிடம் ஐந்து சவரன் நகைகளை திருடிய கோவில் பூசாரியை, போலீசார் கைது செய்தனர்.
அம்பத்துார், டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஷகிலா, 55. இவர், அம்பத்துார் எம்.கே.பி., நகரில் உள்ள நாகாத்தம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம்.
தன் குடும்ப பிரச்னை குறித்து, கோவில் பூசாரியான அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷிடம், 26, கூறியுள்ளார். 'பரிகாரம் செய்தால் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீரும்' என லோகேஷ் கூறியதை நம்பி, கடந்த ஜூன் மாதம் வீட்டில் பூஜை வைத்தார்.
லோகேஷ், திருஷ்டி கழிப்பதாக கூறி, பூஜையில் வைத்திருந்த கலசத்தில், ஷகிலா அணிந்திருந்த நகைகளை போட கூறியுள்ளார். ஷகிலாவும், இரண்டு செயின் மற்றும் ஒரு மோதிரம் என, ஐந்து சவரன் நகையை அதில் போட்டுள்ளார். பின், 'இந்த கலசத்தை நான் கூறும் வரை திறக்கக்கூடாது' என லோகேஷ் கூறி, பூஜையை முடித்து சென்றார்.
இந்நிலையில், பணத்தேவைக்காக நகையை அடமானம் வைக்க கலசத்தை திறந்தபோது, அதனுள் வைக்கப்பட்ட நகைகள் மாயமானது தெரிந்தது.
நேற்று, ஷகிலா அளித்த புகாரையடுத்து, அம்பத்துார் போலீசார் லோகேஷை கைது செய்து, அவரிடம் இருந்து, ஐந்து சவரன் நகைகளை பறிமுதல் செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.

