UPDATED : செப் 13, 2026 10:15 PM
ADDED : செப் 13, 2026 08:43 PM
சென்னை: முதல்வர் விஜய், கடந்த 7ம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தில், தி.மு.க.,வின் முந்தைய ஆட்சி கால ஊழல்கள் குறித்து பட்டியலிட்டார்.
மேலும், தி.மு.க., மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான சர்க்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதானது குறித்தும் விமர்சித்தார்.
இதை கண்டித்து, நேற்று முன்தினம், சென்னை உட்பட, தமிழகத்தின் பல பகுதிகளில், தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
போலீசாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தி, சட்ட விரோதமாக கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
