/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிங்கிள் காலம் மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு
/
சிங்கிள் காலம் மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு
சிங்கிள் காலம் மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு
சிங்கிள் காலம் மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு
ADDED : மே 14, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம் :மேற்கு தாம்பரம், திருவள்ளுவர்புரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம், 58. சண்முகம் சாலையில், சாலையோர பழக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, வியாபாரம் முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார். தாம்பரம், சிவசண்முகம் சாலையில் நடந்து சென்றபோது, ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர்கள், பஞ்சவர்ணத்தின், 5 சவரன் செயினை பறித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர். இது குறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.