/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
7.50 கிலோ கஞ்சாவுடன் தலைமறைவு ரவுடி கைது
/
7.50 கிலோ கஞ்சாவுடன் தலைமறைவு ரவுடி கைது
ADDED : மே 10, 2025 12:25 AM

ஆவடி, மே 10-.
சென்னை ஐ.சி.எப்., அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் தமிழ்வாணன், 37. ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு, கஞ்சா உட்பட்ட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆவடி முத்தாபுதுபேட்டை காவல் நிலைய வழக்குகளில் தொடர்புடைய அவர், ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவுப்படி, தனிப்படை அமைத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆவடி மிட்டனமல்லி, அகரம் கண்டிகை ஏரி அருகே தமிழ்வாணனை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரிடம் இருந்து 'டி.வி.எஸ்., ஸ்கூட்டி பெப்' ஸ்கூட்டர் மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது நேற்று சிறையில் அடைத்தனர்.