/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் பாலியல் சீண்டல் பழவந்தாங்கல் வாலிபர் கைது
/
பெண்ணிடம் பாலியல் சீண்டல் பழவந்தாங்கல் வாலிபர் கைது
பெண்ணிடம் பாலியல் சீண்டல் பழவந்தாங்கல் வாலிபர் கைது
பெண்ணிடம் பாலியல் சீண்டல் பழவந்தாங்கல் வாலிபர் கைது
ADDED : மே 16, 2025 12:36 AM
பழவந்தாங்கல் :பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த, 24 வயது பெண் ஒருவர், தினமும் வீட்டிற்கு அருகே, தனது நாய் குட்டியை, 'வாக்கிங்' அழைத்து செல்வது வழக்கம்.
அப்போது, அதே பகுதியை சேரந்த ஒருவர், அந்த பெண்ணை பார்த்து சிரிப்பது, பின் தொடர்வது, கிண்டல் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி, அந்த பெண் நாய் குட்டியை, 'வாக்கிங்' அழைத்து சென்றபோது, அதை தன்னிடம் தருமாறு அந்த வாலிபர் கேட்டுள்ளார்.
அந்த பெண் தரமறுத்ததால், வலுக்கட்டாயமாக நாயை அந்த பெண்ணிடம் பிடுங்குவது போல, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் புகாரின்படி, பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், பெண்ணிடம் சீண்டலில் ஈடுபட்டது, பழவந்தாங்கல், வீரமாமுனிவர் தெருவை சேர்ந்த கார்த்திக், 24, என்பது தெரிந்தது.
அவரை கைது செய்த பழவந்தாங்கல் போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.