/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் எஸ்.ஐ., எழுதிய நுால் வெளியீடு
/
பெண் எஸ்.ஐ., எழுதிய நுால் வெளியீடு
ADDED : ஆக 25, 2025 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; பெரும்பாக்கம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் சுஜாதேவி எழுதிய 'தேவதை' என்ற நுாலை, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக், நேற்று முன்தினம் வெளியிட்டார். இந்நுாலின் முதல் பிரதியை, கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி பெற்றுக்கொண்டார்.
நுாலாசிரியர் சுஜாதேவி கூறுகையில், ''இந்நுால், 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. குழந்தை, பெண்கள் நலன், கல்வி, காதல், குடும்பம், சமூகம், பாசம், கிரைம் போன்ற மையக் கருத்தை உடைய கதைகள். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில், எளிய நடையில் படைத்துள்ளேன்,'' என்றார்.
இந்நிகழ்வில், உதவி கமிஷனர்கள் வெங்கடேஷ், வைஸ்ணவி, ஆய்வாளர் சண்முகம் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.