/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர் குளத்தில் மூழ்கி பலி
/
துாய்மை பணியாளர் குளத்தில் மூழ்கி பலி
ADDED : மே 02, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனகாபுத்துார், மீனம்பாக்கம் குளத்துமேடு, கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன், 56.
தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டல துாய்மை பணியாளர்.
நேற்று, மே தின விடுமுறையில், அனகாபுத்துார் பூங்கா குளத்தில் குளிக்க சென்றார். தண்ணீரில் மூழ்கிய அவர், நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
தீயணைப்பு துறையினர் வந்து, கஜேந்திரனின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.