/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகைப்பட தொகுப்பு நுாலாக வெளியீடு
/
புகைப்பட தொகுப்பு நுாலாக வெளியீடு
ADDED : செப் 30, 2024 12:21 AM

சென்னை, புதுவை இளவேனில் எழுதிய, 'நிச்சலனத்தின் நிகழ்வெளி' என்ற நுால் வெளியீட்டு விழா, மயிலாப்பூரில் நேற்று நடந்தது. நுாலை, தி.மு.க., - எம்.பி., கனிமொழி வெளியிட, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பெற்றுக்கொண்டார்.
விழாவில், கனிமொழி பேசியதாவது:
புகைப்பட கலைஞர்கள் தான், ஒருவருக்குள் இருக்கும் உணர்வை, அவர் சார்ந்த அடையாளத்தை பிரதிபலிக்கின்றனர்.
அந்த வகையில், சிறுமியாக இருக்கும்போது, ஜடை போட்டு, நிறைய பூ வைத்து, அம்மாக்கள் அழகு பார்ப்பது வழக்கம். அப்படிப்பட்ட என் புகைப்படங்களை இளவேனில் எடுத்துள்ளார்.
இப்படி, பலரின் புகைப்படங்களை எடுத்து, அவற்றை நுாலாக்கிஉள்ளார்.
அமைச்சராக இருந்தபோதும், முதல்வராக இருந்தபோதும், டில்லியில் பிரதமரை தேர்வு செய்யும் பொறுப்பில் இருந்தபோதும் அப்பாவிடம், தான் பிறந்த திருக்குவளை சார்ந்த நினைவுகள் எப்போதும் நிறைந்திருந்தன.
அப்படிப்பட்ட நினைவுகளை சுமந்தவராக, தரையில் அமர்ந்து பேசும் புகைப்படங்கள், 'சுபமங்களா'வில் வெளியாகின.
இப்படி, சே குவேராவின் போர்க்குணம், எழுத்தாளர் பிரபஞ்சனின் இறுமாப்பு, கி.ராஜநாராயணின் அனுபவ பார்வை உள்ளிட்ட அடையாளங்களாக புகைப்படங்களே உள்ளன. அப்படிப்பட்ட புகைப்படங்களை நுால்களாக்கினால், இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

