/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பாரின்' பாட்டிலில் புதுச்சேரி மது முக்கிய குற்றவாளி சிக்கினார்
/
'பாரின்' பாட்டிலில் புதுச்சேரி மது முக்கிய குற்றவாளி சிக்கினார்
'பாரின்' பாட்டிலில் புதுச்சேரி மது முக்கிய குற்றவாளி சிக்கினார்
'பாரின்' பாட்டிலில் புதுச்சேரி மது முக்கிய குற்றவாளி சிக்கினார்
ADDED : ஜன 26, 2025 02:56 AM

அண்ணா நகர்:வெளிநாட்டு பாட்டிலில் புதுச்சேரி மதுவை ஊற்றி, உயர் ரகம் எனக்கூறி விற்ற வழக்கில், மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி சிக்கினார்.
சென்னைக்கு வெளிநாட்டு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார், கடந்த 21ம் தேதி அமைந்தகரை, நெல்சல் மாணிக்கம் சாலையில் கண்காணித்தனர்.
அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்த பேது, 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மதுபாட்டில்கள் சிக்கின.
அதில் இருந்தவர்கள் கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது நசீம், 30, ராவுத்தர் நாயினார் முகமது, 30, சையது அப்துல், 31, மாதவரத்தைச் சேர்ந்த கார்த்திக், 26, என தெரிந்தது.
விசாரணையில் இவர்கள், கொடுங்கையூரில் வீடு வாடகைக்கு எடுத்து, புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு மது வாங்கி வந்து, வெளிநாட்டு காலி மதுபாட்டில்களில் ஊற்றி, உயர் ரகம் எனக் கூறி அதிக விலைக்கு விற்றது தெரிந்தது.
கொடுங்கையூரில், சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்த, புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட, 481 ஒரு லிட்டர் மதுபாட்டில்கள், 920 வெளிநாட்டு காலி மதுபாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். மேற்கண்ட நான்கு பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான, மணலியைச் சேர்ந்த கோபி, 42, என்பவர் தலைமறைவானார்.
இந்நிலையில், முன்ஜாமின் வாங்க ஆதார் அட்டையை எடுக்க, கொடுங்கையூர் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வந்த கோபி, போலீசில் சிக்கினார்.
அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.