/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து குதித்து புனே நபர் தற்கொலை
/
40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து குதித்து புனே நபர் தற்கொலை
40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து குதித்து புனே நபர் தற்கொலை
40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து குதித்து புனே நபர் தற்கொலை
ADDED : ஆக 08, 2025 12:22 AM
மீனம்பாக்கம், விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் பைக்கை நிறுத்தி, 40 அடி உயரத்தில் இருந்து குதித்து ஐ.டி., ஊழியர் தற்கொலை செய்துக் கொண்டார்.
குரோம்பேட்டை, சாந்தி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி தாக்குர், 39. இவர், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை தலைமையிடமாக கொண்ட 'கிளவர் இன்போடெக்' எனும் நிறுவனத்தின், சென்னை அலுவலக வினியோக பிரிவில் மூத்த ஆலோசகராக பணி புரிகிறார்.
வழக்கம்போல, நேற்று காலை வீட்டில் இருந்து பைக்கில் ஆலந்துார் நோக்கி சென்று கொண்டிருந்தார். மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மீனம்பாக்கம் -- திருசூலம் மேம்பாலத்தில் பைக்கை நிறுத்தியுள்ளார்.
திடீரென மேம்பாலத்தின் 40 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், அவரின் தலை, முகம் மற்றும் இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிரிழந்தார். கடந்த மாதம் 6ம் தேதி பணியில் சேர்ந்த அவருக்கு, வேலை பிடிக்கவில்லை எனக் கூறிவந்துள்ளார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து மீனம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.