/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அன்பு இல்லத்தில் பொங்கல் விழா குதுாகலப்படுத்திய மாணவ - மாணவியர்
/
அன்பு இல்லத்தில் பொங்கல் விழா குதுாகலப்படுத்திய மாணவ - மாணவியர்
அன்பு இல்லத்தில் பொங்கல் விழா குதுாகலப்படுத்திய மாணவ - மாணவியர்
அன்பு இல்லத்தில் பொங்கல் விழா குதுாகலப்படுத்திய மாணவ - மாணவியர்
ADDED : ஜன 15, 2024 02:27 AM

அம்பத்துார்:அம்பத்துார், கள்ளிக்குப்பத்தில் 'ஆனந்தம் இல்லம்' எனும் பெயரில் முதியோர் இல்லம் இயங்கி வருகிறது. இதில் 101 முதியோர் தங்கியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆனந்தம் இல்லம் முதியோருடன் பொங்கல் விழா கொண்டாட, 'ரெயின்ட்ராப்ஸ்' என்ற சமூக அமைப்பும், வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி நிர்வாகமும் முடிவெடுத்தனர்.
அந்த வகையில் 'கிராமிய கலை விழா- சீர்மிகு சமத்துவ பொங்கல்' என்ற தலைப்பில், நேற்று முன்தினம் பொங்கல் விழாவை கொண்டாடின.
நிகழ்ச்சியில், சினிமா பின்னணி பாடகி ஏ.ஆர்.ரைஹானா, தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், நடிகர் செந்தில், டாக்டர் டி.வி.தேவராஜன், வேலம்மாள் பள்ளி நிர்வாகி வேல் மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
குத்துவிளக்கு ஏற்றி, கல் அடுப்பில் பொங்கல் வைத்த பின், வேலம்மாள் பள்ளி மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சியுடன் கிராமிய கலை விழா துவங்கியது.
இதில், இளம் பெண்களுடன் மூதாட்டிகள் கண்டாங்கி சேலை கட்டி கும்மி பாடலுக்கு நடனமாடியது, அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
அதேபோல் சுக்ரா நடன குழுவினர் கொக்கலிக்கட்டை ஆட்டம், ஜல்லிக்கட்டு நடனம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களாடி அசத்தினர்.
இதையடுத்து, மக்கள் இசை கலைஞர்கள் சுந்தரமூர்த்தி, முத்து சிற்பி மற்றும் மதிச்சியம் பாலா ஆகியோர், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, அரவிந்த் ஜெயபால் தலைமையிலான 'ரெயின்ட்ராப்ஸ்' குழுவினர் செய்தனர்.